Friday, June 1, 2012

நகைச்சுவை



நகைச்சுவை

  • அந்த கிராமத்தில் எங்க பார்த்தாலும் குண்டுசியா இருக்கு ஏன்?
அது மிகவும் பின்தங்கிய கிராமம்.

  • இடுக்கண் வருங்கால் நகுக
சார் இடுக்கண் நமக்கு வரும் போதா மத்தவங்களுக்கு வரும் போதா?

  • ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
என்னாச்சி?
போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி




  • அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்.




எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்கமாட்டோம்.
என்ன சார் அநியாயமா இருக்கு, அப்ப என் தலையில் முடிவளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?

பள்ளிகூடம் நகைச்சுவை



பள்ளிகூடம் நகைச்சுவை


  • மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.
  • பா எத்தணை வகைப்படும்? அவையாவைன்னு சொல்லு?ஐந்து வகைப்படும் சார் அவை ஆசிரியப்பா, கலிப்பா, வெண்பா, வஞ்சிப்பா, படையப்பா.
  • 100ல் 1 போனால் மீதி எவ்வளவு?00
  • ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?அது வாயில்லா பிராணி சார்.
  • படிச்சு முடிச்சப்புறம் என்ன செய்யலாம்னு இருக்கே...?புக் கை முடிவிடலாம்னு இருக்கேன் சார்.
  • உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்ச?கையை நீட்டு...?
    நீங்களும் அதே தப்பை தான் சார் பண்றீங்க...!
  • மெதுவாக நடந்து வந்தவர் பள்ளிக்கூடம் வந்ததும்ஏன் திடீரென ஓடுகிறார்.
    கேம் 20 மீட்டர் என போர்டு போட்டிருக்கிதனால்.
  • ஏன் உங்க பையன் ஸ்கூலில் ஸ்கேல் வைத்து கொண்டு தூங்குகிறான்?அவன் அளவோடு தூங்குகிறானாம்...!
  • அந்த பூனை ஏன் இந்த ஸ்கூலை சுற்றி சுற்றி வருது?அது எலிமென்டரி ஸ்கூல் என்பதால்.
  • ஆசிரியர் - சுத்தம் சோறு போடும்மாணவன் - சார் அப்படியென்றால் எதுசார் கொழும்பு ஊத்தும்.
  • தேள் கொட்டி விட்டால் முதலில் என்ன செய்யேவண்டும்?ஸ்கூலுக்கு லீவு போடவேண்டும்.
  • 8 ஐயும் 8 ஐயும் கூட்டினால் 9வரும் எப்படி?தப்பா கூட்டினால் வரும்.
  • ஏண்டா லேட்டு...?பள்ளிக்கூடம் மெதுவாக செல்லவும்னு போர்டு போட்டிருந்துச்சு சார்.
  • ஏண்டா பக்கத்து பையனை பார்த்து பார்த்து பரீட்சை எழுதுற?பரீட்சையை நல்லா பார்த்து பார்த்து எழுதுன்னு எங்க அப்பாதா ன் சொன்னார் சார்!

    காதலர்கள் நகைச்சுவை


    காதலர்கள் நகைச்சுவை


  • உங்க இதயத்துல ஒரு உருவம் உக்கார்ந்திருக்கிர மாதிரி எக்ஸ்ரேல தெரியுது.ஒரு பொண்ணு என் இதயத்துல இடம் பிடிச்சுட்டானு சொன்னேல, அவளா இருக்கும் டாக்டர்.
  • ஓடிப்போயிடலாமா டார்லிங்?ஏன் இப்படி பயந்து சாகிறீங்க நடந்தே போகலாம்.
  • எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது?திருப்பிச் சொன்னா எப்படி புரியும்? நேரா சொல்லுங்க.
  • அரசியல்வாதியின் மகளைக் காதலித்தது தப்பாப் போச்சுஏன்?
    காதலை வாபஸ் வாங்கிக் கொள்வேன் என்று அடிக்கடி மிரட்டுகிற ரள்.
  • காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?அது தெய்வீக காதலாம்.
  • எதுக்குடா கால்குலேட்டருடன் அந்த பொண்ணு பின்னாடி சுத்துறே?கணக்கு பண்ணிட்டு இருக்கேன்.
  • என் காதலர் ரொம்ப சஞ்சத்தமா இருக்காருஎன்னாச்சு?
    பீச்சுல பாதி சுண்டலை சாப்பிட்டு, மீதியை மணல்ல புதைச்சு வை நாளைக்கு எடுத்து சாப்பிடலாம்னு சொல்லாரு...!
  • என்ன தொடாம காதலிங்கசுரேஷ்சரி கோவிச்சுக்காத, சுண்டல் வாங்கித் தர்றேன்.
  • முன்னெல்லாம் என் லவ்வர் பீச்சுக்கு கூட்டிட்டு போனா கடலை வாங்கித் தருவாரு. இப்ப ரொம்ப மாறிட்டாரு!இப்படி எப்படி?
    கடலை காண்பிக்கிறதோட சரி!
  • ஒவ்வொரு பண்டிகைக்கும் என் காதலிக்கு ஒரு சேலை வாங்கித் தருவேன்னு தெரியுமா?நான் அவளுக்கு மேட்சா ஜாக்கெட் துணி வாங்கித் தருவேன்னு தெரியுமா?
  • டார்லிங் நம்ம கல்யாணம்?சுண்டல்காரனுக்கு தரவேண்டிய பாக்கி கடன் தீர்ந்ததும்.
  • நேத்து நீயும் நானும் பயர் படம் பார்த்ததை என் லவ்வர் பார்த்துட்டான்.அப்படியா? என்ன சொன்னான்
    என்னை மறந்துடுன்னுட்டான்!
  • என் காதலர் ரொம்ப கஞ்சண்டிஎப்படி சொல்றே?
    அவர் வீட்டிலிருந்தே சுண்டலை ரெடி பண்ணிக் கொண்டு வந்துட்டாரு...!